/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மறை மாவட்ட 125வது ஆண்டு நிறைவு விழா நாளை துவக்கம்மறை மாவட்ட 125வது ஆண்டு நிறைவு விழா நாளை துவக்கம்
மறை மாவட்ட 125வது ஆண்டு நிறைவு விழா நாளை துவக்கம்
மறை மாவட்ட 125வது ஆண்டு நிறைவு விழா நாளை துவக்கம்
மறை மாவட்ட 125வது ஆண்டு நிறைவு விழா நாளை துவக்கம்
ADDED : ஆக 30, 2011 11:49 PM
கடலூர் : புதுச்சேரி - கடலூர் உயர்மறை மாவட்ட 125வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நாளை துவங்குகிறது.
இதுகுறித்து கடலூர் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரட்சகர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி - கடலூர் உயர்மறை மாவட்டத்தின் 125வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு புதுச்சேரி, உப்பளத்தில் கூட்டுத் திருப்பலி நாளை (1ம் தேதி) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் டில்லி பாப்பரசர் 16ம் பெனடிக்ட்டின் தூதர் சல்வதோர் பெனன்சியோ பங்கேற்கிறார். 2ம் தேதி காலை 7 மணிக்கு கடலூர் புனித மரியன்னை இணைப் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார். 9.30 மணிக்கு கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்கிறார். 10.15 மணிக்கு செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 20ம் ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்று, புதுச்சேரி - கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயருக்கு 'கல்விச் சேவை செம்மல்' விருது வழங்குகிறார். செயின்ட் ஜோசப் பள்ளி முன்னாள் முதல்வர் ரட்சகருக்கு சிறந்த 'கல்வியாளர்' விருதை வழங்கி ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கும் திட்டத்தை துவக்கி வைக்கிறார். அமைச்சர் சம்பத் உயர்நிலை ஆராய்ச்சிப் பாடப்பிரிவை துவக்கி வைக்கிறார். சிறப்பு மலரை, அழகிரி எம்.பி., வெளியிடுகிறார். முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன் வாழ்த்திப் பேசுகிறார். இக்கல்லூரியில் இந்தாண்டு எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், யோகா உட்பட பல்வேறு சான்றிதழ் வகுப்புகள் துவக்கப்பட உள்ளது. அடுத்தாண்டு பி.பி.ஏ., மற்றும் பி.ஏ., போன்ற தமிழ் பாடப் பிரிவுகளும் துவங்கப்பட உள்ளது. இவ்வாறு கல்லூரி முதல்வர் ரட்சகர் கூறினார். பள்ளி முதல்வர் ஆக்னல், பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.


