/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மீட்டர் வட்டி கொடுமை கலெக்டரிடம் பெண் புகார்மீட்டர் வட்டி கொடுமை கலெக்டரிடம் பெண் புகார்
மீட்டர் வட்டி கொடுமை கலெக்டரிடம் பெண் புகார்
மீட்டர் வட்டி கொடுமை கலெக்டரிடம் பெண் புகார்
மீட்டர் வட்டி கொடுமை கலெக்டரிடம் பெண் புகார்
ADDED : ஆக 30, 2011 02:30 AM
திண்டுக்கல்:மீட்டர் வட்டி கும்பலிடம் இருந்து தன் குடும்பத்தை பாதுகாக்க கோரி, திண்டுக்கல்லை சேர்ந்த ஜீவா, கலெக்டரிடம் மனுகொடுத்தார்.
திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டர் ரோட்டை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளி ராமர் மனைவி ஜீவா. சிறிய அளவில் மெஸ் நடத்தி வருகிறார்.தொழில் நடத்துவதற்காக மேட்டுப்பட்டியை சேர்ந்த சாந்தி என்பவரிடம், ஆறு மாதத்திற்கு முன்பு 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.இதற்கு ஒவ்வொரு வாரமும் தவணை செலுத்தி வந்துள்ளார். தற்போது மொத்தமாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயாக கடன் தொகை உயர்ந்துள்ளதாக கூறி, உடனே தரவேண்டும், என ஜீவா வை, கடன் கொடுத்த சாந்தி மிரட்டத்துவங்கியுள்ளார். பணம் தராவிட்டால், குழந்தைகளை கடத்திச்சென்றுவிடுவதாக கூறுவதாகவும் ஜீவா புகாரில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டார்.


