Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விருதுநகருக்கு கிடைக்குமா கைத்தறி துணி நூல் பூங்கா

விருதுநகருக்கு கிடைக்குமா கைத்தறி துணி நூல் பூங்கா

விருதுநகருக்கு கிடைக்குமா கைத்தறி துணி நூல் பூங்கா

விருதுநகருக்கு கிடைக்குமா கைத்தறி துணி நூல் பூங்கா

ADDED : ஆக 30, 2011 01:42 AM


Google News

விருதுநகர்: தமிழகத்தில் 10 இடங்களில் கைத்தறி துணி நூல் பூங்கா அமைக்க, அரசு வாக்குறுதியளித்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் துணி நூல் பூங்கா அமைக்க, அரசு முன் வர வேண்டும்.

மாவட்டத்தில் ராஜபாளையம், சத்திரப்பட்டி,சேத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், கைத்தறி, பேண்டேஜ் மற்றும் விசைத்தறி நெசவு பணிகள் நடக்கின்றன. ராஜபாளையம், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் துணி நூல் தயாரிக்கும் ஸ்பின்னிங் தொழிற்சாலைகள் உள்ளன. 50 தொழில் முனைவோர் இருந்தால், அவர்களது பங்களிப்பாக ரூ.4 கோடி, மத்திய அரசு தரப்பில் ரூ.36 கோடி வழங்கப்பட்டு, துணி நூல் பூங்கா அமைக்கப்படும். இதில், துணி நூல் தயாரிப்புகளுக்கு தேவையான அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும். இதை, விருதுநகர் மாவட்டத்தில் அமைக்க அரசு முன் வர வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us