/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/குழந்தைகளுடன் குளத்தில் குதித்த தாய்குழந்தைகளுடன் குளத்தில் குதித்த தாய்
குழந்தைகளுடன் குளத்தில் குதித்த தாய்
குழந்தைகளுடன் குளத்தில் குதித்த தாய்
குழந்தைகளுடன் குளத்தில் குதித்த தாய்
ADDED : ஆக 30, 2011 01:40 AM
விருதுநகர்: விருதுநகரில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண், தற்கொலை செய்ய, தனது இரண்டு குழந்தைகளுடன், தெப்பக்குளத்தில் குதித்தார்.
அதில் ஒரு மாத ஆண் குழந்தை இறந்தது. விருதுநகர் காந்தி நகரை சேர்ந்த கூலி தொழிலாளி லெட்சுமணன்,32. இவரது மனைவி லட்சுமி, 26. இவர்களுக்கு முருகேஸ்வரி, 5, ஒரு மாத ஆண் குழந்தை உள்ளது. சில மாதங்களாக லட்சுமியும், முருகேஸ்வரியும் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளனர். கடந்த வாரம் வீட்டில் தூக்கிட்டு, தற்கொலைக்கு முயன்ற லட்சுமி காப்பாற்றப்பட்டார். நேற்று மதியம் அவர், தனது இரண்டு குழந்தைகளுடன், விருதுநகர் தெப்பக்குளத்திற்குள் குதித்தார். அங்கிருந்தவர்கள் லட்சுமி , முருகேஸ்வரியை காப்பாற்றினர். ஒரு மாத குழந்தை நீரில் மூழ்கி இறந்தது. குழந்தை உடலை, தீயணைப்பு துறையினர் மீட்டனர். விருதுநகர் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.


