Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/நீர் பாசன திட்டத்துக்கு முக்கியத்துவம் உயர் கல்வித்துறை அமைச்சர் உறுதி

நீர் பாசன திட்டத்துக்கு முக்கியத்துவம் உயர் கல்வித்துறை அமைச்சர் உறுதி

நீர் பாசன திட்டத்துக்கு முக்கியத்துவம் உயர் கல்வித்துறை அமைச்சர் உறுதி

நீர் பாசன திட்டத்துக்கு முக்கியத்துவம் உயர் கல்வித்துறை அமைச்சர் உறுதி

ADDED : ஆக 29, 2011 11:42 PM


Google News

தர்மபுரி: ''நீர் பாசன திட்டத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்,'' என உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

மொரப்பூர் ஒன்றியத்தில் நல்லகுட்டஹள்ளி, கொட்டாவூர், அஸ்திகிரி, தானனூர், முத்தனூர், புதுரெட்டியூர், மைலாப்பூர், கெடகரஹள்ளி, திட்லானூர், தேக்கநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களில் மக்களை அமைச்சர் பழனியப்பன் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது:



தேர்தலில் அறிவித்தபடி ரேஷன் கடைகளில் 20 கிலோ இலவச அரிசியை முதல்வர் ஜெயலலிதா சொன்னபடி வழங்கி வருகிறார். ஏழை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தான் முதல்வர் ஜெயலலிதா அரசின் நோக்கம்.

இந்தாண்டு மாணவர்களுக்கு இரண்டு செட் உடையும், அடுத்தாண்டு முதல் நான்கு செட் உடையும் வழங்கப்படும். மாணவர்கள் கல்வியை பாதியில் நிறுத்தாத வகையில் மாணவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.



ஆண்களுக்கு சமமாக பெண்களும் கல்வியில் உயர வேண்டும். தர்மபுரி மாமவட்டத்தில் இரு கல்லூரிகளும், தொழில் கூடங்கள், சிப்காட், ஃபுட்பார்க் போன்றவை அமைய அனுமதியை முதல்வர் அளித்துள்ளார். அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவை வழங்கப்படும். ஒன்றரை ஆண்டில் ரேஷனுன் கார்டு உள்ள அனைவருக்கும் வழங்கப்படும்.



கடந்த ஆட்சியில் இருந்த மின் தட்டுப்பாடு போக்க பல்வேறு திட்டங்கள் திட்டப்பட்டு வருகிறது. பொதியம்பள்ளம் அணைக்கட்டு திட்டத்தை பெரிதாக மாற்றி நீர் பாசனத்துக்கு பயன்படுத்த கோரிக்கை மனு கொடுத்துள்ளீர்கள். ற்கனவே எம்.எல்.ஏ.,வாக இருந்த போது தொகுதி நிதியில் இருந்து 2 கோடி அணைக்கட்டு சீரமைத்தேன். தற்போது, அதை விரிவுப்படுத்தி 17 ஏரிகள் பயன்படும் வகையில் அதை பெரிய திட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார். பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் பழனிசாமி, மொரப்பூர் பி.டி.ஓ., கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் குமார், பெரிசாமி, ராஜேந்திரன், தொகுதி செயலாளர்கள் செல்வம் (பாப்பிரெட்டிப்பட்டி), பார்த்திபன் (அரூர்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us