ADDED : ஆக 29, 2011 11:10 PM

சட்டசபையில், இன்று காலை கேள்வி நேரம் முடிந்ததும், வனத்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை மீதான விவாதங்களுக்கு, அத்துறை அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர்.
அதன்பின், இந்து சமய அறநிலையத்துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை, சுற்றுலா ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்கிறது. இதற்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் செந்தமிழன், சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் பதிலளிக்கின்றனர்.