/உள்ளூர் செய்திகள்/சென்னை/கள் இறக்க விட மாட்டேன்: குமரி அனந்தன் உறுதிகள் இறக்க விட மாட்டேன்: குமரி அனந்தன் உறுதி
கள் இறக்க விட மாட்டேன்: குமரி அனந்தன் உறுதி
கள் இறக்க விட மாட்டேன்: குமரி அனந்தன் உறுதி
கள் இறக்க விட மாட்டேன்: குமரி அனந்தன் உறுதி
ADDED : ஆக 29, 2011 11:03 PM
சென்னை : ''கள் இறக்க எதிர்ப்புத் தெரிவித்து, தொடர்ந்து போராடுவேன்'' என, முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் பேசினார்.
சென்னை மகாஜன சபா சார்பில், குமரி அனந்தனுக்கு காமராஜர் விருது வழங்கும் விழா, சென்னையில் நடந்தது. விருதினை ஓய்வுப் பெற்ற தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன் வழங்கினார். விழாவில், குமரி அனந்தன் பேசியதாவது: தமிழகத்திற்கு, காந்தி 20 முறை வந்தார். அவர் காலடி பட்ட இடங்களுக்கு எல்லாம் சென்று, காந்தியைப் பற்றி மக்களிடம் நினைவு கூர்ந்தோம். அடுத்த மாதம் 20ம் தேதி மதுரைக்குச் சென்று, காந்தி அரை ஆடை உடுத்திய இடத்தில், மக்களைச் சந்திக்க இருக்கிறோம். சென்னை மகாஜன சபா, 127 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. இச்சங்கம் துவங்கி, 20 மாதங்கள் கழித்துத் தான், காங்கிரஸ் கட்சியே உருவானது.காங்கிரஸ் கட்சியின் முதல் மாநாட்டில், காமராஜர் தமிழில் தலைமை உரை ஆற்றினார். பார்லிமென்டில் முதன் முதலாக, தமிழில் நான் தான் கேள்வி கேட்டேன். என்னை காமராஜர் தான், அரசியலுக்கு அழைத்து வந்தார். இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் பதவி வழங்கினார். கள் இறக்க, சிலர் அனுமதி கேட்கின்றனர். கள் உணவுப்பொருள் அல்ல. அது போதை தரும். கள் இறக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தொடர்ந்து போராடுவேன்.இவ்வாறு, குமரி அனந்தன் பேசினார்