ADDED : ஆக 29, 2011 10:09 PM
சிதம்பரம்: சிதம்பரத்தில் தே.மு.தி.க., சார்பில் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
மாநில பொறியாளர் அணி துணைச் செயலர் உமாநாத் தலைமை தாங்கினார். பண்ருட்டி எம்.எல்.ஏ., சிவக்கொழுந்து துவக்கி வைத்தார். மாவட்டச் செயலர் சசிக்குமார், துணைச் செயலாளர் பாலு, ஞானபிரகாசம், நகர செயலர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.