ஆர்.டி.ஓ., தலைமையில் அமைதி கூட்டம்
ஆர்.டி.ஓ., தலைமையில் அமைதி கூட்டம்
ஆர்.டி.ஓ., தலைமையில் அமைதி கூட்டம்
ADDED : ஆக 28, 2011 11:24 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ஆர்.டி.ஓ.,வின் சமரச பேச்சுவார்த்தையால் அரசாணை எரிக்கும் பேராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த முடியனூர் ஊராட்சியில் உள்ள குரூர் வருவாய் கிராமத்தை தனி ஊராட்சியாக மாற்றக் கோரி கிராம மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். குரூர் தனி ஊராட்சி அனுமதி கிடைக் காததல் வரும் 31ம் தேதி குரூர் மகளிர் மன்றம் முன்பு அரசு ஆணை எண் 131 எரிக்கும் போராட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி கிராம மக்கள் விண்ணப்பம் அளித்தனர். இதனையொட்டி நேற்று கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி. ஓ., உமாபதி தலைமையில் சமாதனக்குழு கூட்டம் நடந்தது. தாசில்தார் வைகுண்டவரதன், தியாகதுருகம் பி.டி.ஓ., அன்பழகன், வருவாய் ஆய்வாளர் சற்குணம், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ், பிரமுகர்கள் அய்யா சாமி, தங்கவேல் பங்கேற்றனர். குரூர் கிராம மக்களின் கோரிக்கையான தனி ஊராட்சி குறித்து கலெக்டரிடம் பரிந்துரை செய்யப் படும். ஊரக வளர்ச்சி துறை ஆணையருக்கு குரூர் தனி ஊராட்சி கோரிக்கை குறித்து கலெக்டர் மூலம் பரிந்துரை செய்வதாக ஆர். டி.ஓ., உமாபதி கூறியதால் அரசாணை எரிக்கும் போராட்டத்தை கிராம மக்கள் வாபஸ் பெற்றனர்.