ADDED : ஆக 28, 2011 11:19 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த மேலூர் டி.எஸ்.எம்., ஜெயின் பொறியியல் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
கல்லூரி தாளாளர் மனோகர்குமார் சுராணா தலைமை தாங்கினார். செயலாளர் அசோக்குமார் சுராணா முன்னிலை வகித்தார். குஷால் கல்வி அறக் கட்டளை நிறுவனர் தேஜ்ராஜ் சுராணா வகுப்புகளை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் திருவேங்கடாச்சாரி சிறப்புரையாற்றினார். விரிவுரையாளர்கள் சரஸ்வதி சம்பத், இலாகி ராஜேஷ்குமார், துரைராசு, வாசுதேவன், செல்வம் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியை விரிவுரையாளர் ரம்யா தொகுத்து வழங்கினார். கல்லூரி செயலாளர் அசோக்குமார் சுராணா முதலாமாண்டு பாட புத்தகங்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் சுந்தரமூர்த்தி செய்திருந்தார். விரிவுரையாளர் பொற்கொடி நன்றி கூறினார்.