/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/குளத்தில் ஷட்டர் திருட்டு நீர் தேக்குவதில் சிக்கல்குளத்தில் ஷட்டர் திருட்டு நீர் தேக்குவதில் சிக்கல்
குளத்தில் ஷட்டர் திருட்டு நீர் தேக்குவதில் சிக்கல்
குளத்தில் ஷட்டர் திருட்டு நீர் தேக்குவதில் சிக்கல்
குளத்தில் ஷட்டர் திருட்டு நீர் தேக்குவதில் சிக்கல்
ADDED : ஆக 28, 2011 10:11 PM
.திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் பெரியம்மா பட்டி குளத்தில் உள்ள ஷட்டரை சிலர் திருடி சென்றுள்ளதால் மழைநீரை தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் நாகராஜன் தலைமையில் நடந்தது. உத்தயகவுண்டன்பட்டியில் உள்ள மின் டிரான்ஸ்பார்மரை மாற்ற வேண்டும். ஜம்புதுரை கோட்டையில் தெருவிளக்குகள் அமைத்து தரப்படவில்லை, என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.கலெக்டர் நாகராஜன் பேசியதாவது: விவசாயிகள் குறைகள் குறித்து விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். ஒட்டன்சத்திரம் பெரியம்மாபட்டியில் குளத்தில் ஷட்டரை திருடி சென்றுள்ளனர். மழை பெய்தால், தண்ணீர் நிற்காமல் வெளியேறும் நிலை உள்ளது. மழை காலம் துவங்குவதற்கு முன்பு, விவசாய சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள் வரத்து வாய்க்கால், குளங்களின் கரைகள், ஷட்டர்களை கண்காணித்து எனக்கோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக் கோ தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்