முஷாரப்பின் சொத்துக்கள் பறிமுதல்: கோர்ட் உத்தரவு
முஷாரப்பின் சொத்துக்கள் பறிமுதல்: கோர்ட் உத்தரவு
முஷாரப்பின் சொத்துக்கள் பறிமுதல்: கோர்ட் உத்தரவு
ADDED : ஆக 28, 2011 09:26 PM

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் கொலை வழக்கில், நேரில் ஆஜராவதற்கு, முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தொடர்ந்து மறுத்து வருவதால், அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்யும்படி, அதிகாரிகளுக்கு, அந்நாட்டு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பெனசிர் கொலை வழக்கில் நேரில் ஆஜராவதற்கு முஷாரப் மறுத்து வருகிறார்.
அதனால் அவரை, 'தேடப்படும் குற்றவாளியாக' லாகூரில் இயங்கி வரும் பயங்கரவாதத் தடுப்பு கோர்ட் ஏற்கனவே அறிவித்தது. பாக்., புலனாய்வு ஏஜன்சி (எப்.ஐ.ஏ.,), அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்யும்படி ஏற்கனவே கோர்ட்டில் கோரிக்கை விடுத்திருந்தது. நேற்று நடந்த விசாரணையில், முஷாரப் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வருவது குறித்த இறுதிக் கட்ட அறிக்கையை, எப்.ஐ.ஏ., கோர்ட்டில் சமர்ப்பித்தது. இதையடுத்து, 'முஷாரப்பின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவரது வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட வேண்டும்' என, கோர்ட், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.