ADDED : ஆக 26, 2011 12:58 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பார்த்தீனியம் செடிகள் அழிப்பு முகாமை கலெக்டர் மணி மேகலை துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் அதிகளவில் விளைந்துள்ள பார்தீனியம் செடிகளை அழிக்க வேண்டுமென முதல்வர் ஜெ., உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை சார்பில் பார்த்தீனியம் செடிகள் அழிப்பு முகாமை கலெக்டர் மணிமேகலை நேற்று விராட்டிக்குப் பம் கிராமத்தில் துவக்கி வைத்தார். இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சக்கரவர்த்தி, வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன், தோட்டக் கலைத் துறை இணை இயக்குனர் பன்னீர் செல்வம், வேளாண் உதவி இயக்குனர் ஹரிகிருஷ்ணன் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் மணிமேகலை நிருபர் களிடம் கூறியதாவது: பார்த்தீனியம் செடிகள் அதிகளவில் விளைந்து இயற்கை வளத்தை சீரழிக்கிறது. இதை சாப்பிடும் விலங்குகளுக்கும் பல நோய் கள் ஏற்படும். மனிதர்களுக்கும் உடல் உபாதை ஏற்படும். தமிழக முதல்வர் உத்தரவுபடி மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் பார்த்தீனியம் செடிகள் அழிப்பு முகாம் நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.