/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ச"மாற்றத்துக்கான நடைபயணம்' :பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்புச"மாற்றத்துக்கான நடைபயணம்' :பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
ச"மாற்றத்துக்கான நடைபயணம்' :பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
ச"மாற்றத்துக்கான நடைபயணம்' :பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
ச"மாற்றத்துக்கான நடைபயணம்' :பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
ADDED : ஆக 25, 2011 11:36 PM
கோவை : ஊழலுக்கு எதிரான சமூக சேவகர் அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு வலு
சேர்க்க, கோவை கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று பிரம்மாண்டமான
முறையில் அமைதி பேரணி நடத்துகின்றனர்.
ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க
விரும்பும், நாட்டு முன்னேற்றத்தில் தங்கள் பங்கேற்பை பதிவு செய்ய
விரும்பும் ஒவ்வொரு கோவைவாசியும் இந்த 'கிளைமாக்ஸ்' பேரணியில் பங்கேற்று
பெருமைப்படலாம். ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற
வலியுறுத்தி, பத்தாவது நாளாக டில்லியில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து
வருகிறார். கோவையில் கடந்த பத்து நாட்களாகவே 'ஊழலுக்கு எதிரான இந்தியா'
அமைப்பினர் அமைதி போராட்டங்களை நடத்தி அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து
வருகின்றனர். 'ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பின் மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் பிரவீன் சீனிவாசன் கூறியதாவது: உச்ச கட்டத்தை எட்டியுள்ள
ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க, கோவை பள்ளி, கல்லூரி மாணவர்களை
இணைத்து 'மாற்றத்துக்கான நடை பயணம்' என்ற அமைதி பேரணி நடத்தவுள்ளோம். நாளை
(இன்று) பகல் 3.00 மணிக்கு அவிநாசி ரோடு 'சிட்ரா' சந்திப்பில் துவங்கும்
பேரணியில், வழியெங்கும் உள்ள 16 பள்ளி, கல்லூரி மாணவியர் மற்றும் தேச
நலனில் அக்கறையுள்ள பொதுமக்கள் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். அவிநாசி
ரோட்டில் உள்ள கல்லூரிகள் மட்டுமல்லாமல், கணபதி, சூலூர், சரவணம்பட்டி,
தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பிற பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும்
பேரணியில் பங்கேற்கின்றனர். கோவையில் உள்ள அனைத்து தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சமூக சேவை அமைப்புகளின் ஆதரவுடன் பேரணி
நடைபெறுகிறது. அவினாசி ரோட்டில் துவங்கும் பேரணி, எட்டு கி.மீ., தூரத்தை
கடந்து வ.உசி., பூங்காவில் நிறைவு பெறும். ஊழலுக்கு எதிரான கோவையின் குரல்
டில்லியை சென்றடையும்படி தேசிய கொடி, ஊழலுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய
தட்டிகளுடன் அனைவரும் பங்கேற்கலாம்.இவ்வாறு, பிரவீன் சீனிவாசன் கூறினார்.