ADDED : ஆக 25, 2011 11:13 PM
காந்திகிராமம் : காந்தி கிராம கிராமிய பல்கலையின் வேந்தராக நீடிக்க வேண்டும் என, துணை ஜனாதிபதி அமீது அன்சாரிக்கு, பேராசிரியர், ஊழியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
பல்கலை செனட் மூலம் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை வேந்தர் தேர்வு செய்யப்படுவார். துணை ஜனாதிபதியை, வேந்தராக தேர்வு செய்வது இப்பல்கலையின் மரபு. கடந்த 2007, 2010 ல், அமீது அன்சாரி தொடர்ந்து வேந்தராக தேர்வு செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன், வேந்தர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இந்நிலையில், வேந்தர் பதவியில் நீடிக்க வேண்டும் என, அவருக்கு துறை தலைவர், பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.