சக்சேனா, லெனின் கருப்பனுக்கு "சம்மன்' சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அனுப்புகிறது
சக்சேனா, லெனின் கருப்பனுக்கு "சம்மன்' சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அனுப்புகிறது
சக்சேனா, லெனின் கருப்பனுக்கு "சம்மன்' சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அனுப்புகிறது
சென்னை : நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா குறித்த ஆபாச வீடியோ காட்சிகள் தொடர்பாக, சன்,'டிவி' சக்சேனா மற்றும் லெனின் கருப்பனுக்கும், விரைவில் சம்மன் அனுப்ப, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி., சேகர், டி.ஐ.ஜி., ஸ்ரீதர் மேற்பார்வையில், எஸ்.பி., பரணிக்குமார் விசாரித்து வருகிறார். சில தினங்களுக்கு முன், நித்யானந்தா சாமியார் சி.பி.சி.ஐ.டி., ÷ பாலீசில் நேரில் ஆஜரானார். நடிகை ரஞ்சிதாவிடமும் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, சன்,'டிவி' சக்சேனா, அய்யப்பன் மற்றும் இதில் தொடர்புடைய லெனின் கருப்பனிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். விரைவில், மூவருக்கும் சம்மன் அனுப்பப்படும் என, உயர் அதிகாரி ஒருவர் கூறினார். விசாரணையில், 'மார்பிங்' முறையில், ஆபாச படம் தயாரித்தது தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.