சோலைக் காடுகள் குறித்த ஆராய்ச்சிதொடங்கியது :வனத்தை பெருக்க திட்டம்
சோலைக் காடுகள் குறித்த ஆராய்ச்சிதொடங்கியது :வனத்தை பெருக்க திட்டம்
சோலைக் காடுகள் குறித்த ஆராய்ச்சிதொடங்கியது :வனத்தை பெருக்க திட்டம்
நகர விரிவாக்கத்தால் ஊட்டி, கொடைக்கானலில் உள்ள சோலைக் காடுகளின் பரப்பளவு வெகுவாக குறைந்து வருகிறது.
1992ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, ஊட்டி சோலைக் காடுகள் 4,225 எக்டேராக குறைந்தது. இதனால், சோலைக் காடுகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், சோலைக் காடுகள் மனிதனுக்கு எவ்வளவு மதிப்புள்ள பயன்களை தருகின்றன என்ற ஒரு ஆராய்ச்சி துவங்கப்பட்டுள்ளது. அரசு நிதியுடன், சமூக வனவியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி சங்கம், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. நேரிடையான பலன்கள், சீர்படுத்தும் சேவைகள், பண்பாட்டு சேவைகள், பல்லுயிர் தொகுப்பு உருவாவதற்கு மூலாதாரங்கள் என நான்கு பிரிவுகளாக, இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மையத்தின் அதிகாரிகள், இரண்டு ஆண்டுகளுக்கு நேரிடையாக இந்த ஆய்வை மேற்கொள்வர். பின், ஆய்வின் அறிக்கை அரசுக்கு அனுப்பிவைக்கப்படும். சோலைக் காடுகள் மக்களுக்கு எவ்வளவு பயன்களை தருகின்றன என்பதை உணர்த்துவதற்கும், முக்கியத்துவத்தை அறிந்து, காடுகளை பாதுகாக்க மக்கள் முன்வருவதற்கும் இந்த ஆராய்ச்சி பயனுள்ளதாக இருக்கும்.
ஆராய்ச்சி குறித்து, சமூக வனவியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி சங்கத்தின் இயக்குனர் ஜெயினுலாவுதீன் கூறுகையில்,'வனத்தில் உள்ள பல்லுயிர் பெருக்கத்தின் சேவைகள் மனிதனுக்கு இன்றியமையாதவை. இந்த பயன்கள் வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும், மறைமுகமாக மதிப்பிட முடியாத ஒன்று. இதுபோன்ற ஒரு ஆராய்ச்சி இதுவரை நடந்ததில்லை. மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசு தனி கவனம் செலுத்த இது உதவியாக இருக்கும். சோலைக் காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதை தடுக்க, கட்டடங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், அடுத்த சில ஆண்டுகளில் சோலைக் காடுகளின் பரப்பளவு வெகுவாக குறைந்து, நிலச்சரிவு அதிகமாக ஏற்படும்,' என்றார்.
இதுவே முதல் முறை...
எப்படி செய்யப் படுகிறது ஆராய்ச்சி...
கே.ஆறுமுகம்