Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/போஸ்ட்மேன் கொலை வழக்குநெல்லையில் இருவர் கைது

போஸ்ட்மேன் கொலை வழக்குநெல்லையில் இருவர் கைது

போஸ்ட்மேன் கொலை வழக்குநெல்லையில் இருவர் கைது

போஸ்ட்மேன் கொலை வழக்குநெல்லையில் இருவர் கைது

ADDED : ஆக 22, 2011 02:33 AM


Google News
திருநெல்வேலி:நெல்லையில் முன்விரோதத்தில் போஸ்ட்மேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.தச்சநல்லூர் தேனீர்குளத்தை சேர்ந்தவர் பெரியசாமி(40). தச்சநல்லூர் போஸ்ட்ஆபீசில் போஸ்ட்மேனாக இருந்தார். நேற்றுமுன்தினம் மதியம் பெரியசாமி தச்சநல்லூர் பாலாஜி அவென்யூ 5வது தெருவில் ஒரு வீட்டுக்கு தபால் கொடுக்க சென்றார்.அப்போது ஆட்டோவில் வந்த சிலர் பெரியசாமியை வழிமறித்து தகராறு செய்தனர். அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பினர். இச்சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.போலீஸ் கமிஷனர் வரதராஜூ, துணை கமிஷனர் ஜெயபாலன் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கமிஷனர் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர்கள் ராஜ்பால், குருநாதன், சோமசுந்தரம் உள்ளிட்ட தனிப்படையினர் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், முன்விரோதம் காரணமாக பெரியசாமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கடந்த 2008ம்ஆண்டு நவம்பர் 19ம்தேதி பணத்தகராறு உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக தேனீர்குளத்தை சேர்ந்த கருப்பசாமி, அவர் மகன் இசக்கியை ராதாகிருஷ்ணன், போஸ்ட்மேன் பெரியசாமி உட்பட 3 பேர் அரிவாளால் வெட்டினர். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர். எனினும் இரு தரப்பினருக்கும் இடையே நீறு பூத்த நெருப்பாக பகையுணர்வு தொடர்ந்து வந்தது.இதன் எதிரொலியாக நேற்றுமுன்தினம் இசக்கி, அவர் சகோதரர்கள் ஆட்டோ டிரைவர் சங்கர், பால் வியாபாரி ஆறுமுகம், அவர் நண்பர்கள் தச்சநல்லூர் டவுன் ரோட்டை சேர்ந்த குருபாபு(17), ஜோசப்(23) உள்ளிட்டோர் பெரியசாமியை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. நேற்று குருபாபு, ஜோசப் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.கொலை செய்யப்பட்ட பெரியசாமி உடல் நேற்று பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது. இதையொட்டி தச்சநல்லூர் பகுதியில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us