/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாளை. யில் 28ம் தேதிஹாக்கி போட்டி துவக்கம்பாளை. யில் 28ம் தேதிஹாக்கி போட்டி துவக்கம்
பாளை. யில் 28ம் தேதிஹாக்கி போட்டி துவக்கம்
பாளை. யில் 28ம் தேதிஹாக்கி போட்டி துவக்கம்
பாளை. யில் 28ம் தேதிஹாக்கி போட்டி துவக்கம்
ADDED : ஆக 22, 2011 02:31 AM
திருநெல்வேலி:பாளை.
யில் மாவட்ட ஹாக்கி லீக் போட்டிகள் வரும் 28ம்தேதி
துவங்குகிறது.விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2011-12ம்ஆண்டு மாவட்ட
ஆண்கள் ஹாக்கி லீக் போட்டிகள் பாளை. அண்ணா விளையாட்டு மைதானத்தில் வரும்
28ம்தேதி துவங்கி 31ம்தேதி வரை நடக்கிறது. மாவட்டத்தை சேர்ந்த பள்ளி,
கல்லூரி, கிளப், நிறுவன அணிகள் போட்டியில் பங்கேற்கலாம்.போட்டியில் முதல்
இரு இடங்களை பெறும் அணிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். வெற்றி
பெறும் அணி மண்டல போட்டிக்கு அரசு செலவில்
அழைத்துச்செல்லப்படும்.போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள் தங்கள்
அணியின் பெயர், பொறுப்பாளர் பெயர், வீரர்கள் பெயர் பட்டியல், முகவரி, போன்
எண்ணுடன் வரும் 25ம்தேதி மாலை 5 மணிக்குள் பாளை. அண்ணா விளையாட்டு
மைதானத்தில் செயல்படும் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள
வேண்டும். பதிவு செய்த அணிகள் மட்டும் போட்டியில் பங்கேற்க
முடியும்.இத்தகவலை மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதிசற்குணம்
தெரிவித்தார்.