ADDED : ஆக 21, 2011 02:34 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு பிரிவு மனுதாரர்கள் ஆறாவது விசாரணை கூட்டம் ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடந்தது.
ஜூன் 27ல் துவங்கப்பட்ட சிறப்பு பிரிவில், இதுவரை மொத்தம் 617 மனுக்கள் பெறப்பட்டதில், 223 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 386 மனுக்களின் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. சிறப்பு பிரிவு துவங்கி 55 நாட்களான நிலையில் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 32 மனுதாரர்களின் நில சம்பந்தமான விசாரணை கூட்டம் ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடந்தது. ஏ.டி.எஸ்.பி., மகேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு பிரிவு டி.எஸ்.பி., கோவிந்தராஜ் உடனிருந்தார்.


