ADDED : ஆக 21, 2011 02:12 AM
சென்னை : கலப்பட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் மீது, சட்ட நடவடிக்கையை மாநகராட்சி எடுத்துள்ளது.கோடம்பாக்கம் மற்றும் அயனாவரம் பகுதிகளில், மாநகராட்சி பொது சுகாதாரத்துறை உணவு ஆய்வாளர்கள், திடீர் சோதனை மேற்கொண்டனர்.
ஆய்வில், அவிட்டா முட்டைக் குழம்பு மசாலா, கிச்சன் கிங் கடலை மாவு, சுவாமிஸ் வெள்ளை நிற மிளகுப் பொடி ஆகியன, கலப்படம் செய்யப்பட்டு, விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.இவற்றின் மாதிரியை, பரிசோதனை செய்ததில், உணவுக் கலப்படம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவற்றின் உரிமையாளர்கள் மீது, உணவு கலப்படச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், அவிட்டா முட்டைக் குழம்பு மசாலா, கிச்சன் கிங் கடலை மாவு, சுவாமிஸ் வெள்ளை நிற மிளகுப் பொடி ஆகியன, உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்பதால், அவற்றை சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.