கோயம்பேடு மார்க்கெட்டில் இயல்பு நிலை
கோயம்பேடு மார்க்கெட்டில் இயல்பு நிலை
கோயம்பேடு மார்க்கெட்டில் இயல்பு நிலை
ADDED : ஆக 21, 2011 02:11 AM
கோயம்பேடு : தென் மாநிலம் முழுவதும், லாரி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு போதிய லாரிகளில், காய்கறிகளின் வரத்து இருந்ததால் இயல்பு நிலை நீடித்தது.
காய்கறி மார்க்கெட்டிற்கு, வழக்கமாக நாள்தோறும், 360 முதல் 380 லாரிகளில் காய்கறி வரத்து இருக்கும். இந்நிலையில், நேற்று முன்தினம் 300 முதல் 320 லாரிகளில், வரத்து இருந்தது. 60 லாரிகள் மட்டுமே குறைந்த நிலையில், வரத்து போதுமானதாக இருந்தது. இதனால், பெரும்பாலான காய்கறிகளின் விலையிலும், மாற்றம் ஏற்படவில்லை.இருப்பினும், அடுத்தடுத்த நாட்களில், லாரிகள் பெரியளவில் இயங்காத பட்சத்தில், காய்கறிகளின் வரத்து குறையும். கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, காய்கறிகளை ஏற்றி வந்த லாரிகளும் திரும்பச் செல்லாமல், ஸ்டிரைக்கில் இருக்கும் நிலையுள்ளது. இந்தச் சூழ்நிலையில், ஸ்டிரைக்கிற்கு தீர்வு எட்டப்படாத பட்சத்தில், காய்கறி விலை உயரும் நிலையுள்ளது.