எல்.ஐ.சி., வணிகத்தை குறைக்கும் மசோதாவை நிறைவேற்றக்கூடாது
எல்.ஐ.சி., வணிகத்தை குறைக்கும் மசோதாவை நிறைவேற்றக்கூடாது
எல்.ஐ.சி., வணிகத்தை குறைக்கும் மசோதாவை நிறைவேற்றக்கூடாது
ADDED : ஆக 21, 2011 02:06 AM
மதுரை : '' எல்.ஐ.சி., வணிகத்தை குறைக்கும், எல்.ஐ.சி., சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது'' என, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சாமிநாதன் தெரிவித்தார்.
மதுரையில் நடந்த இன்சூரன்ஸ் கழக ஊழியர்கள் சங்க கூட்டத்தில் அவர் கூறியதாவது: இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவில் தற்போதைய அன்னிய முதலீட்டை 26 லிருந்து 49 சதவீதமாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.மூன்றாண்டுகளில் அமெரிக்காவில் உள்ள 500 தனியார் வங்கிகள் திவாலாகி உள்ளன.
இந்நிலை இந்தியாவில் வரக்கூடாது என்பதற்காக அன்னிய முதலீட்டை அதிகரிக்கக் கூடாது. எல்.ஐ.சி., லாபத்தில் கிடைக்கும் உபரித் தொகையில் 95 சதவீதத்தை பாலிசிதாரர்களுக்கு போனசாக வழங்கி வருகிறது. எல்.ஐ.சி., சட்டதிருத்த மசோதாவில் போனஸ் தொகையை 90 சதவீதமாக குறைக்க கூறியுள்ளனர். இதன்மூலம் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மை, பாலிசிகளின் எண்ணிக்கை குறையும். இந்திய பொருளாதார திட்டங்களுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் நிதி ஆதாரமாக விளங்கும் எல்.ஐ.சி.,யின் வணிகத்தை கடுமையாக பாதிக்கும். மறைமுகமாக தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஆதரிப்பதற்காக மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மசோதாக்களின் மீதும் விவாதம் நடந்தால், நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்தம் நடத்துவோம், என்றார். சங்க நிர்வாகிகள் விஜயரத்தினபாண்டியன், ஜோசப், ராஜகுணசேகர், வெங்கட்ராமன், சந்திரசேகரன், சையது கனி, மீனாட்சிசுந்தரம், புஷ்பராஜன், மகேஸ்வரி பங்கேற்றனர்.