ADDED : ஆக 19, 2011 11:08 PM
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை இடங்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. நகராட்சி ஆணையர் சங்கரன், மேலாளர் கிளமென்ட், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் திராவிட மணி மற்றும் நகராட்சி நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணிகளை இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் மற்றும் போலீஸார் செய்திருந்தனர்.


