Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/லஞ்ச வழக்கில் எஸ்.எஸ்.ஐ., கைது

லஞ்ச வழக்கில் எஸ்.எஸ்.ஐ., கைது

லஞ்ச வழக்கில் எஸ்.எஸ்.ஐ., கைது

லஞ்ச வழக்கில் எஸ்.எஸ்.ஐ., கைது

ADDED : ஆக 19, 2011 11:06 PM


Google News
மணப்பாறை: மணப்பாறை அருகே லஞ்ச வழக்கில் எஸ்.எ ஸ்.ஐ., ஒருவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகிலுள்ள ஆணாங்கரைபட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (45). இவர் கடந்த 7ம் தேதி தனது பெட்டிக்கடையில் அரசு அனுமதியின்றி மது விற்றதாக வையம்பட்டி போலீஸ் எஸ்.எஸ்.ஐ., பெருமாள் (54) என்பவர் அவரைக் கைது செய்து ஸ்டேஷன் பெயிலில் அனுப்பியுள்ளார். கடந்த 2 நாளுக்கு முன் வெள்ளைச்சாமியை அழைத்த எஸ்.எஸ்.ஐ., பெருமாள் உன்குடும்பத்தினர் மீதும் வழக்கு போடாமல் இருக்க வேண்டும் என்றால் 1,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். லஞ்சமாக பணம் கொடுக்க விருப்பமில்லாத வெள்ளைச்சாமி, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸில் நேற்று காலை இதுகுறித்து புகார் தெரிவித்தார். போலீஸார் ஆலோசனைப்படி, நேற்று இரவு 7 மணியளவில் வையம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் சென்ற வெள்ளைச்சாமி, எஸ்.எஸ் .ஐ., பெருமாளிடம் 1,000 ரூபாய் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையிலான போலீஸார் எஸ்.எஸ்.ஐ., பெருமாளை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக உடனடியாக திருச்சி கொண்டு செல்லப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us