Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/பயணிகளுக்கு பயனளிக்காத "சிசி-டிவி' திட்டம் :திருச்சி ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

பயணிகளுக்கு பயனளிக்காத "சிசி-டிவி' திட்டம் :திருச்சி ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

பயணிகளுக்கு பயனளிக்காத "சிசி-டிவி' திட்டம் :திருச்சி ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

பயணிகளுக்கு பயனளிக்காத "சிசி-டிவி' திட்டம் :திருச்சி ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

ADDED : ஆக 19, 2011 11:06 PM


Google News
திருச்சி: படக்காட்சியுடன் ரயில்வே குறித்த தகவலறியும் 'சிசி-டிவி' திட்டம் தனியாருக்கு லாபம் அளிக்கும் வகையில் செயல்படுகிறது.

படக்காட்சியுடன் ரயில்வே குறித்த தகவல் அறியும் 'சிசி-டிவி' (ஆடியோ விஷூவல் க்ளோஸ்டு சர்க்யூட் கலர் 'டிவி') திட்டம் கடந்த ஜூலை மாதம் 10ம் தேதியிலிருந்து திருச்சி ரயில்வே ஜங்ஷனில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார், பொது பங்களிப்புடன் துவங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் திருச்சி ரயில்வே ஜங்ஷன் முழுவதும் 40 கலர் 'டிவி'க்கள் (32 அங்குல எல்.சி.டி., மானிட்டர்) பொருத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக 29 'டிவி'க்கள் பொருத்தப்பட்டு, செயல்படுகிறது. ரயில் வருகை நேரம், புறப்பாடு, ரயில்வே ஜங்ஷன் நடவடிக்கைகள், விழிப்புணர்வு குறும்படங்கள், ரயில்வே ஜங்ஷனில் உள்ள தங்கும் அறைகள் விவரங்கள் போன்றவை ரயில் பயணிகள் அறியும் வகையில் படக்காட்சியுடன் ஒளிபரவும், 12 மணி நேரம் ரயில்வே குறித்த விவரங்களும், மீதமுள்ள 12 மணி நேரம் தனியார் விளம்பரங்களும் ஒளிபரப்பப்படும் என இத்திட்டம் துவங்கியபோது, அறிவித்தனர். மொத்தம் 15 லட்சம் ரூபாய் செலவில், கோடீஸ்வர் என்பவர் இத்திட்டத்தை நடத்தி வருகிறார். திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் வைத்தியலிங்கம் இத்திட்டத்தை ஏற்கனவே துவக்கி வைத்து பேசுகையில், ''இத்திட்டம் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். ரயில்வே குறித்த விவரங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, தனியார் விளம்பரங்களும் சுழற்சி முறையில் ஒளிபரப்பப்படும். 24 மணி நேரமும் இச்சேவை வழங்கப்படும். ஏற்கனவே ரயில் தகவல் குறித்த அறிவிப்பு (கம்ப்யூட்டர் ஆடியோ) ஒலிபரப்பு நடைமுறையில் உள்ளது. இது படக்காட்சிகளுடன் ரயில் நிலவரம் குறித்த தகவல்கள் ஒளிபரப்பப்படும்,'' என்றார். ரயில் வருகை, புறப்பாடு குறித்து பயணிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டம், முறையாக இயங்குவதில்லை. 12 மணி நேரம் ரயில்வே குறித்த தகவல் விழிப்புணர்வும், 12 மணி நேரம் தனியார் விளம்பரம் படக்காட்சியும் சுழற்சிமுறையில் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலும் தனியார் விளம்பரங்களும், திரைப்படக்காட்சி அல்லது பாடல்களும் தான் ஒளிபரப்பப்படுகிறது. தனியாருக்கு மட்டும் பயன்தரும் வகையில் இத்திட்டம் தற்போது மாறியுள்ளது. ரயில் வரும்போது, அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படுவது இல்லை. மாறாக பயணிகளை கவரும் வகையில், ஏதாவது விளம்பரம் அல்லது படக்காட்சிகள் தான் ஒளிபரப்பப்படுகிறது. இந்த 'டிவி'யிலிருந்து வெளியாகும் சத்தத்தால், ரயில்வே நிர்வாகம் மைக் மூலம் ஒலிபரப்பும் அறிவிப்பும் சரியாக கேட்பதில்லை. இத்திட்டம் தனியாருக்கு லாபம் அளிக்கும் வகையில் செயல்படுகிறது. மொத்தத்தில் பயணிகளுக்கு பயனளிக்காத இத்திட்டம் குறித்து ரயில்வே கோட்ட மேலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us