/உள்ளூர் செய்திகள்/தேனி/அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடுஅத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு
அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு
அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு
அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு
ADDED : ஆக 19, 2011 11:02 PM
தேனி:அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக,
கலெக்டர் பழனிசாமி தெரிவித்தார்.லாரிகள் வேலை நிறுத்தம், தொடர்பான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் பழனிசாமி
தலைமையில், நடந்தது.
டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி, கலெக்டரின் நேர்முக
உதவியாளர் (பொது) மூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமல்சாமி உட்பட
பலர் பங்கேற்றனர்.கலெக்டர் பழனிசாமி கூறியதாவது:ஆவின் பால், சமையல் காஸ்,
காய்கறிகள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும். ஸ்டிரைக்கை காரணம் காட்டி, காஸ் சிலிண்டர்களை கூடுதல்
விலைக்கு விற்பதாக புகார்கள் வந்துள்ளன. அதுபோல் விற்பவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட வழங்கல் அலுவலர் கண்காணிக்க வேண்டும்.
காய்கறிகளும், அதிக விலைக்கு விற்க கூடாது. இவற்றை கண்காணித்து காலை 10
மணி, பகல் 3 மணி ஆகிய இரண்டு வேளைகளில் அறிக்கை தரவேண்டும், என்றார்.


