சனிக்கிழமை வேலைஊராட்சிகளுக்கு உத்தரவு
சனிக்கிழமை வேலைஊராட்சிகளுக்கு உத்தரவு
சனிக்கிழமை வேலைஊராட்சிகளுக்கு உத்தரவு
ADDED : ஆக 19, 2011 11:00 PM
தேவதானப்பட்டி:தேனிமாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் வேலை
நடக்காத ஊராட்சிகளில் உடனடியாக பணிகளை துவங்கி, சனிக்கிழமையும் வேலை செய்ய
வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தேனிமாவட்டத்தில் தேசிய
ஊரகவேலை உறுதித்திட்டம் மூலம் கண்மாய், ஊரணி, நீர் வரத்து வாய்க்கால்கள்
தூர்வாரும் பணிநடந்து வருகிறது.
சில ஊராட்சிகளில் வேலை நடைபெறவில்லை.
இவ்வாறான ஊராட்சிகளில் உடனடியாக வேலையை துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சனிக்கிழமையும் வேலை செய்ய வேண்டும். 119 ரூபாய் சம்பளம் வழங்க நடவடிக்கை
எடுப்பதோடு, அதற்குறிய வேலையை அளவீடு படி செய்ய வலியுத்த வேண்டும் என்று
ஊராட்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


