/உள்ளூர் செய்திகள்/திருச்சி/மனம் நலம் பாதித்தவருக்கு ஆறுதல் தேவை : திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் உருக்கம்மனம் நலம் பாதித்தவருக்கு ஆறுதல் தேவை : திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் உருக்கம்
மனம் நலம் பாதித்தவருக்கு ஆறுதல் தேவை : திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் உருக்கம்
மனம் நலம் பாதித்தவருக்கு ஆறுதல் தேவை : திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் உருக்கம்
மனம் நலம் பாதித்தவருக்கு ஆறுதல் தேவை : திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் உருக்கம்
ADDED : ஆக 19, 2011 10:59 PM
குளித்தலை: குளித்தலை அருகே சீத்தப்பட்டியில் சாந்தி வன கலையரங்க திறப்பு விழா முன்னாள் எஸ்.பி., கலிய மூர்த்தி தலைமையில் நடந்தது.
விழாவில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் வைத்தியலிங்கம் கலையரங்கத்தை திறந்து வைத்து பேசியதாவது: மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி இருக்கிறோம் என்று கூட தெரியாமல் சிந்திக்க முடியாத நிலையில் சாலையோரங்கள், வாய்க்கால், பொது இடங்களில் சுற்றி திரிகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் பார்த்து அனுதாபபட்டால், அவர்களுக்கு எந்த பயனும் கிடைக்காது. அவர்களை பழைய நிலைக்கு கொண்டு செல்ல உதவ வேண்டும். அவர்களுக்கு அனுதாபம் தேவையில்லை. ஆறுதலும், ஆ தரவும்தான் தேவை. அப்போது தான் சாந்தி வனம் போன்ற மனநலம் காப்பகங்கள் மூலம் மனம் நலம் பாதிக்கப்பட்டவர்களை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். மனம் நல காப்பகம் நடத்தி வருபவர்களுக்கு மனித குலத்தில் உள்ள அனைவரும் நன்றி கடன் செலுத்த கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். சாந்தி வனம் மனநலம் காப்பக நிர்வாக செயலாளர் ராமகிருஷ்ணன் பேசுகையில், ''சீத்தப்பட்டி மனநல காப்பகம் மூலம் 350க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர். இந்தியாவின் பல மாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 140 பேரை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளோம். மத்திய, மாநில அரசு மூலம் எவ்விதமான நிதியுதவி இல்லாமல் காப்பகம் நடந்து வருகிறது,'' என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரி கணித பேராசிரியர் ஹேமலதா, சாஸ்தா கல்லூரி தலைவர் தியாகராஜன், மனநல டாக்டர் ராஜாராம், காப்பாளர் சம்பத், துறை தலைவர் தங்கராஜ், டிரஸ்டி ராஜேந்திரன், பஞ்சாயத்து தலைவர் ராகவன் உள்பட பலர் பங்கேற்றனர்.


