Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பக்தர்களை காக்கும் பார்த்தசாரதி

பக்தர்களை காக்கும் பார்த்தசாரதி

பக்தர்களை காக்கும் பார்த்தசாரதி

பக்தர்களை காக்கும் பார்த்தசாரதி

ADDED : ஆக 19, 2011 05:15 PM


Google News

பக்தர்களை காக்கும் பார்த்தசாரதி



நம் கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தால், அவை பார்த்தசாரதியின் துனையோடு நிறைவேறும் என்பது உண்மை.

மிக மோசமான சூழலுக்கு தள்ளப்பட்ட பக்தர்களை கை கொடுத்து காப்பாற்றுவார் என்ற அபாரமான நம்பிக்கையும், கோரிக்கைகளை நிறைவேற்ற தவறாதவர் என்ற பெருமை பெற்றவர் பார்த்தசாரதி பெருமாள். பார்த்தனுக்கு சாரதியாக விளங்கியதால், பார்த்தசாரதி என்ற பெயர் பெற்றார். மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு சாரதியாக வந்த கிருஷ்ணருக்கு; போரில் விழுப்புண் ஏற்பட்டு, முகத்தில் தழும்பு ஏற்பட்டது. தர்மத்தை நிலைநிறுத்த போரில் ஆக்ரோஷ மீசையுடன், வில் அம்புகளோடு களமிறங்கினார். அப்போது ஏற்பட்ட காயங்களால் வீரத்தழும்புகள் ஏற்பட்டது. அந்த தோற்றம் தான் திருவல்லிக்கேனி பார்த்தசாரதி பெருமாள். எங்கும் காண முடியாத காட்சியை பக்தர்கள் இங்கு தரிசிக்கின்றனர். தாயார் பாமா, ருக்மணி சமேதரராக பார்த்தசாரதி வீரத்தழும்புகளோடு, மீசையுடன் காட்சியளிக்கிறார்.

கோவில் ஸ்தலபுராணம் பிருந்தாரண்ய மகாத்மியம் என்ற அத்தியாயத்தில் எழுதப்பட்டுள்ளது. பிருந்தம் என்பது துளசியையும், ஆரண்யம் என்பது காடு என்பதை குறிப்பிடுகிறது. அதற்கேற்ப இப்பகுதி முன்பு துளசிக்காடாக காட்சியளித்தது.

திருவல்லிக்கேணி பகுதியை சுமதி என்ற அரசன் ஆண்டார். தேரோட்டியாக இருந்த பெருமாளின் உருவத்தை காண; நீண்ட காலமாக தவமிருந்தார். கோரிக்கையை ஏற்ற சுவாமி, அசரீரியாக தகவல் தெரிவித்தார். அதன் பேரில் பிருந்தாரண்யத்துக்கு மன்னர் சென்று பார்த்த போது அவருக்கு பார்த்த சாரதியாக பெருமாள் ஒரு கையில் சங்கையும், மற்றொரு கையில் பாதாரவிந்தந்தோடும் காட்சியளித்தார்.

இக்கோவில் 800 ம் ஆண்டை சேர்ந்த பழமையானது. கோவில் வளாகத்தில் ஏராளமான கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன. கோவிலுக்கு அளித்த கொடைகள், அரசர்கள் மேற்கொண்ட பணிகள் பற்றி இக்கல்வெட்டுகள் தகவல் தருகின்றன. மகாலட்சுமி, பூதேவித்தாயார், நரசிம்மபெருமாள், வராகநாராயணப்பெருமாள், சேஷன், கிருஷ்ணன், ருக்மணிதேவி, அனிருத்ரன், சாத்திகையாழ்வார் உள்ளிட்ட விக்கிரகங்கள் உள்ளன. 11 ஆழ்வார்களுக்கு உற்சவங்கள் நடந்தாலும்; வேதவல்லிநாச்சியாருக்கென்று தனியாக உற்சவம் நடத்தப்படுகிறது.



கோவிலைப்பற்றி திருமங்கையாழ்வார் பத்து பாசுரங்களையும்; பேயாழ்வார், திருமழிசையாழ்வார் தலா ஒரு பாசுரமும் பாடியுள்ளனர். அல்லிக்குளம் கோவிலின் புஷ்கரணியாகும். வைணவர்களின் வரம் தீர்க்கும் கோவிலாக திகழ்கிறது. அதனால் பணி நிமித்தமாக நாடு முழுக்கச் சுற்றினாலும், பார்த்தசாரதியை ஆண்டுக்கொருமுறை வந்து தரிசனம் செய்துவிட்டு போக பக்தர்கள் யாரும் தயங்குவதில்லை.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us