/உள்ளூர் செய்திகள்/மதுரை/கழிப்பறை உரிமத்தை ரத்து செய்தமாநகராட்சி உத்தரவை எதிர்த்த மனுகழிப்பறை உரிமத்தை ரத்து செய்தமாநகராட்சி உத்தரவை எதிர்த்த மனு
கழிப்பறை உரிமத்தை ரத்து செய்தமாநகராட்சி உத்தரவை எதிர்த்த மனு
கழிப்பறை உரிமத்தை ரத்து செய்தமாநகராட்சி உத்தரவை எதிர்த்த மனு
கழிப்பறை உரிமத்தை ரத்து செய்தமாநகராட்சி உத்தரவை எதிர்த்த மனு
ADDED : ஆக 19, 2011 04:54 AM
மதுரை:மதுரை மாநகராட்சி வடக்கு ஆவணி மூல வீதி கழிப்பறை உரிமத்தை ரத்து
செய்த கமிஷனர் உத்தரவை எதிர்த்து தாக்கலான மனுவை, ஐகோர்ட் கிளை தள்ளுபடி
செய்தது.மதுரை அனைத்து காய்கறி வியாபாரிகள் நலச்சங்க செயலாளர் பாலன்
தாக்கல் செய்த ரிட் மனு:வடக்கு ஆவணி மூல வீதியில் சென்ட்ரல் மார்க்கெட்
அருகே மாநகராட்சி கழிப்பறை உள்ளது. அதை நிர்வகிக்கும் உரிமம் சங்கத்திற்கு
வழங்கப்பட்டது. விதிகளுக்கு உட்பட்டு கழிப்பறையை பராமரித்து, நடத்தி
வந்தோம். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், அதிகாரிகள்
காழ்ப்புணர்ச்சியுடன், கழிப்பறை உரிமத்தை ரத்து செய்தனர். வேறு நபர்களுக்கு
ஒதுக்கும் வகையில் கமிஷனர், இந்த உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை ரத்து செய்ய
வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.மனு நீதிபதி ஆர்.சுதாகர் முன் விசாரணைக்கு
வந்தது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மாநகராட்சி வக்கீல் ரவிசங்கர்,
''மாநகராட்சி விதிகளுக்கு புறம்பாக கழிப்பறை அருகிலுள்ள இடத்தை
பயன்படுத்தினர். உரிமத்தை ரத்து செய்ய கமிஷனருக்கு அதிகாரம் உள்ளது,''
என்றார். அதை ஏற்று, ரிட் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.