ADDED : ஆக 18, 2011 12:30 AM
கடலூர் : ஜூனியர் ரெட்கிராஸ் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் கடலூரில் நடந்தது.
கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமில் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பின் ஆசிரியர்கள் 120 பேர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் உதயகுமார் சாம் தலைமை தாங்கி வரவேற்றார். மாவட்ட கன்வீனர் கோவிந்தராஜ், வட்ட பொறுப்பாளர்கள் விமல்ராஜ், குமார், சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை துவக்கி வைத்து, மாநில அளவிலான கன்வீனர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கிய சி.இ.ஓ., அமுதவல்லி பேசகையில், 'ஒவ்வொரு பள்ளியிலும் வாரம் தோறும் புதன்கிழமையில் ரெட்கிராஸ் கொடி ஏற்ற வேண்டும். மாணவர்களுக்கு ரெட் கிராசின் அடிப்படை கொள்கைகளை விளக்கி, அவர்களுக்கு சேவை மனப்பான்மையை வளர்க்க வேண்டும்' என்றார். முகாமில், ஏ.ஆர்.எல்.எம். பள்ளி முதல்வர் ராஜயோககுமார், பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் ஆகியோர் ரெட்கிராஸ் இயக்கத்தில் ஆசிரியர்கள் பங்கு குறித்து பேசினர்.


