கொடி நாள் வசூலில் சிவகாசி முதலிடம்
கொடி நாள் வசூலில் சிவகாசி முதலிடம்
கொடி நாள் வசூலில் சிவகாசி முதலிடம்
ADDED : ஆக 18, 2011 12:24 AM
சிவகாசி : மாநிலம் முழுவதும், படைவீரர்கள் நலனுக்காக அரசு அலுவலங்களில் கொடிநாள் நிதி வசூல் செய்யப்படும்.
சிவகாசி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரிவு அலுவலகம் மூலம் ரூ.2.30 லட்சத்திற்கு கொடி விற்பனை செய்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. அதிக நிதிவசூல் செய்த சிவகாசி மோட்டார் வாகன ஆய்வாளர் பி.தர்மானந்தனை பாராட்டி ஆளுநரின் பாராட்டு பத்திரம், பதக்கம் ஆகியவற்றை கலெக்டர் பாலாஜி வழங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர் தர்மானந்தன் மூன்றாவது முறையாக கொடி வசூல் சாதனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


