Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ல்வராயன்மலை கோடை விழா கள்ளக்குறிச்சியில் ஆலோசனைக

ல்வராயன்மலை கோடை விழா கள்ளக்குறிச்சியில் ஆலோசனைக

ல்வராயன்மலை கோடை விழா கள்ளக்குறிச்சியில் ஆலோசனைக

ல்வராயன்மலை கோடை விழா கள்ளக்குறிச்சியில் ஆலோசனைக

ADDED : ஆக 17, 2011 03:41 AM


Google News

கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலையில் கோடை விழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன்மலையில் வரும் 20,21ம் தேதி கோடை விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து நேற்று கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் அலு வலகத்தில் ஆர்.டி.ஓ., உமாபதி தலைமையில் ஆலோசனை நடந்தது. கூட்டத்தில், விழா மேடை அமைத்தல், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு, போக்குவரத்து வசதிகளுக்கு சிறப்பு பஸ்கள், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பயனாளிகள் பட்டியல் தயார் செய்வது, சுகாதாரமான குடிநீர் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் டி.எஸ்.பி., சரவணக்குமார், தாசில்தார்கள் கள்ளக்குறிச்சி வைகுண்டவரதன், சங்கராபுரம் கோகுலபத்மநாபன், டாக்டர் நேரு உட்பட வேளாண் துறை, வனத்துறை, தீயணைப்பு துறை, கால்நடைத் துறை உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us