Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் கோரிக்கை

பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் கோரிக்கை

பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் கோரிக்கை

பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் கோரிக்கை

ADDED : ஆக 17, 2011 03:36 AM


Google News

திண்டிவனம் : பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணியை நிரப்ப வேண்டுமென பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வானூர் வட்ட நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் காந்தி மேல் நிலைப் பள்ளியில் நடந்த தேர்தல் கூட்டத்திற்கு வட்டத் தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஆனந்தவேலு முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

இதில், வட்ட செயலாளர் பெரியசாமி, தலைவர் கஜேந்திரன், பொரு ளாளர் ராமதாஸ், இணை செயலாளர் பாரி, துணை தலைவர் முருகன், மகளிரணி செயலாளர் சிவசங்கரி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில், ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வை உடனே நடைமுறை படுத்த வேண்டும். தமிழக அரசு வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் புதிய ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்ப்டடன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us