Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு செயலாக்க கருத்தரங்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு செயலாக்க கருத்தரங்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு செயலாக்க கருத்தரங்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு செயலாக்க கருத்தரங்கம்

ADDED : ஆக 16, 2011 06:19 PM


Google News

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவர்களுக்கு, செயலாக்கக் கருத்தரங்கம் நடந்தது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் யுவசக்தி ஆகியவை இணைந்து, மாணவர்களிடையே ஆளுமைத் தகுதி மற்றும் பண்பு பயிற்சி வளர்ப்பது தொடர்பான, 'இளைஞர் செயலாக்கக் கருத்தரங்கம் 2011' என்ற நிகழ்ச்சியை, பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தின. அண்ணா பல்கலையின் என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் செல்லதுரை வரவேற்றார்.

யுவசக்தி செயலர் பிரவீன்குமார் அறிமுகவுரை நிகழ்த்தினார். பல்கலைக்கழக, சி.இ.ஜி., வளாக டீன் சேகர், விழாவிற்குத் தலைமை தாங்கிப் பேசினார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்துப் பேசியதாவது: சுதந்திரத்திற்குப் பின், மக்கள் சுதந்திரமாக இருக்கின்றனர். தற்போது, மக்களுக்கு சுய கட்டுப்பாடுள்ள சுதந்திரம் அவசியம். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள், வல்லரசாக மாறும் நாடுகள். இந்தியா வல்லரசாக மாறுவதற்கு, இங்குள்ள மக்களின் அறிவும், கட்டுப்பாடும் தான் காரணம். நாம் எவ்வளவு தான் முன்னேறினாலும், கடந்து வந்த பாதையையும், அவ்வப்போது பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.சார்ட்டட் அக்கவுன்டன்ட் வெங்கடேஷ், விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 'இந்திய சுதந்திரத்தில் இளைஞர்கள்' என்ற தலைப்பில் பேசுகையில், ' மாணவர்களிடம், நான் வல்லரசு நாட்டின் குடிமகன் என்ற இறுமாப்பும், பொறுப்பும் இருக்க வேண்டும். நமது நாட்டின் வரலாறு மற்றும் தொழில்நுட்பம் குறித்து, அறிந்து கொள்ள வேண்டும். உலகில், அதிகம் கடன் வாங்கிய நாடு அமெரிக்காதான். அது ஏழு லட்சம் கோடி ரூபாயை, கடனாகப் பெற்றுள்ளது. இதில், இந்தியாவில் இருந்து கூட, இரண்டரை லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. உலகை நீங்கள் அதிகாரம் செய்யாவிட்டால், அது உங்களை அதிகாரம் செய்துவிடும்' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us