Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/மின் உரிமம் பெற்றவர்களிடம் கட்டிட பணி :மின் அமைப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

மின் உரிமம் பெற்றவர்களிடம் கட்டிட பணி :மின் அமைப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

மின் உரிமம் பெற்றவர்களிடம் கட்டிட பணி :மின் அமைப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

மின் உரிமம் பெற்றவர்களிடம் கட்டிட பணி :மின் அமைப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

ADDED : ஆக 15, 2011 02:30 AM


Google News
சேலம்: '' நுகர்வோர்கள், கட்டிட மேஸ்திரி மற்றும் பொறியாளர்கள் மின் உரிமம் பெற்றவர்களிடம், மின் பணிகளை ஒப்படைக்க வேண்டும்,'' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சேலத்தில், தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கத்தின் சேலம் தெற்கு பகுதி கிளையின் நான்காம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், சேலம் தெற்கு பகுதி கிளை செயலளர் கோபால், மாநில அமைப்பு செயலாளர் கிருஷ்ணன், மாநி பொதுது செயலாளர் கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மின்வாரிய பிரிவு அலுவலகங்களில், பொதுமக்களின் பார்வைக்கு தெரியும்படி அரசாங்க அங்கீகாரம் பெற்ற மின் ஒப்பந்ததாரர்கள் பெயர், விலாசம் மற்றும் மொபைல்ஃபோன் ஆகியவற்றை அறிவிப்பு பலகையில் தெரிவிக்க வேண்டும். மின் இணைப்பில் பழுது மற்றும் மின் விபத்து ஏற்பட்டாலும், மின் வாரிய பிரிவு அலுவலகங்களுக்கு தெரிவிக்க வாரிய அலுவலகம் முன்பு செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், களப்பணியாளர்களின் மொபைல் நம்பரை அறிவிப்பு பலகையில் தெரிவிக்க வேண்டும். மின் இணைப்பில் உள்ள பழுதடைந்த மின் அளவிகளை உடனடியாக மின்வாரியம் மாற்றுவதில்லை. கால தாமதமாக மின் அளவிகளை மாற்றுவதால், நுகர்வோர்கள் அதிகமான மின் கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கிறது. எனவே, மின் அளவிகளை மாற்ற வேண்டும். புதிய மின் இணைப்பு வழங்க வாரியத்தில், மும்முனை மீட்டர் இருப்பில்ல. இதனால் நுகர்வோர்கள் வீடுகட்டி, குடியேற முடியாமலும், வணிக வளாகம் நடத்த முடியாமலும், தொழிற்சாலைகளை இயக்க முடியாமலும் சிரமப்படுகின்றனர். இதற்கு மின்வாரியம் துரிதமாக நடவடிக்கை எடுத்து புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும். புதிய வீடுகள், அடுக்குமாடி கட்டிடங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளுக்கு மின் பணிகளை மேற்கொள்ளும்போது நுகர்வோர்கள், கட்டிட மேஸ்திரிகள், கட்டிட பொறியாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு மின் உரிமம் பெற்றவர்களிடம் மின் பணிகளை ஒப்படைக்க வேண்டும். புதிய மின் இணைப்புகளை மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் வழங்கும்போது, சம்மந்தப்பட்ட மின் ஒப்பந்ததாரர்களை வைத்து கொண்டு மின் இணைப்பு வழங்க வேண்டும். மின்வாரியத்தில், சில பணியாளர்கள் சட்டத்துக்கு மாறாக வாரியத்துக்குதெரியாமல் தனியார் மின் பணிகளை செய்து வருகின்றனர். மின் பணியை மட்டும் நம்பி உள்ள மின் அமைப்பாளர்கள் தொழில் பாதிப்பு அடைந்து வருகின்றனர். மின் அமைப்பாளர்களின் வாழ்க்கை மேம்பட மின்வாரிய பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு கட்டுமான தொழிலார்கள் நலவாரியத்தில், புதிதாக தொழிலாளர்கள் பதிவு செய்ய கிராம நிர்வாக அலுவலரின் சான்றை தவிர்த்து, முன்பு இருந்ததை போலவே சங்க சான்றே போதுமானதென அறிவிக்க வேண்டும்., என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us