/உள்ளூர் செய்திகள்/சேலம்/மானிய விலையில் நூல் ஏ.ஐ.டி.யூ.சி., கோரிக்கைமானிய விலையில் நூல் ஏ.ஐ.டி.யூ.சி., கோரிக்கை
மானிய விலையில் நூல் ஏ.ஐ.டி.யூ.சி., கோரிக்கை
மானிய விலையில் நூல் ஏ.ஐ.டி.யூ.சி., கோரிக்கை
மானிய விலையில் நூல் ஏ.ஐ.டி.யூ.சி., கோரிக்கை
UPDATED : ஆக 15, 2011 02:32 AM
ADDED : ஆக 15, 2011 02:26 AM
சேலம்: கைத்தறி தொழிலில் தொடர்ந்து நலிவு அடைந்து வருவதால், மானிய விலையில் நூல் கிடைக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என, ஏ.ஐ.டி.யூ.சி., மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம், அயோத்தியாபட்டணத்தில், சேலம் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி., 20வது மாநாடு நடந்தது. மாநில குழு உறுப்பினர் முருகன் வரவேற்றார். மாநிலத் தலைவர் சுப்பராயன், கட்டுமான தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ரவி, டி.என்.ஜி.இ.யு., சங்கத் தலைவர் பெரியசாமி ஆகியோர் பேசினர். மாநாட்டு கொடியை ஏற்றி வைத்து, மாநில பொதுச்செயலாளர் தியாகராஜன் பேசினார். கைத்தறிக்கென்று ஒதுக்கிய சுத்தப்பட்டு ரகத்தை விசைத்தறி மூலம் தயாரிப்பதை தடுக்க வேண்டும். தமிழகத்தில் பணிபுரியும் வீட்டு பெண் தொழிலாளர்களை பாதுகாக்க குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல், மகப்பேறு காலத்தில் ஆறு மாத விடுமுறையை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் கட்டாயமாக்க வேண்டும். முந்திரி தொழிலில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்களை பாதூக்க தனியான நலவாரியம் அமைக்க வேண்டும். கைத்தறி தொழிலில் தொடர்ந்து நலிவு அடைந்து வருவதால், மானிய விலையில் நூல் கிடைக்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். ஆண்களுக்கு இணையாக வேலைகளில் ஈடுபடுகின்ற பெண் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். முந்திரி, சாயத்தொழில், நெசவுத் தொழில் போன்றவற்றில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் நோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களை பாதுகாக்க மருத்துவ உதவிக்கான சட்ட பாதுகாப்புகளை அரசு உருவாக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சேலம் மாவட்ட செயலாளர் பரமசிவம், பொருளாளர் விமலன், உள்பட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.