எம்.எல்.ஏ.,க்கு இளைஞர் காங்., கண்டனம்
எம்.எல்.ஏ.,க்கு இளைஞர் காங்., கண்டனம்
எம்.எல்.ஏ.,க்கு இளைஞர் காங்., கண்டனம்
ADDED : ஆக 15, 2011 02:13 AM
ஈரோடு: காங்கிரஸ் குறித்து கேவலமாக பேசிய எம்.எல்.ஏ., தனியரசுக்கு இளைஞர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்ட ராஜீவ் பேரவை சார்பில் வெளியிட்ட அறிக்கை: பாரம்பரிமிக்க காங்கிரஸ் இயக்கத்தை தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ., தனியரசு கேவலமாக பேசி, 'காங்கிரஸ் ஒரு கட்சியே இல்லை' என, கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி பற்றி பேச தனியரசுக்கு என்ன தகுதியில்லை. தனி சின்னம் கூட இல்லாமல் ஒரே ஒரு சீட் வாங்கி, அவர் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். ஜாதி அரசியல், கோஷ்டி அரசியல் செய்து பிழைப்பு நடத்தும் அவருக்கு அரசியல் தெரியாது. சட்டசபையில் எப்படி பேச வேண்டும். நடந்து கொள்ள வேண்டும் என தெரியாமல் பேசுகிறார். காங்கிரஸையும், அதன் தலைவர்களையும் அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து பேசினால், ராஜீவ்காந்தி பேரவை சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தி, தனியரசு மீது அவதூறு வழக்கு தொடருவோம் என எச்சரிக்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.