Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/உசிலம்பட்டி அருகே கார் மரத்தில் மோதி விபத்து : ஊராட்சி எழுத்தர்கள் உட்பட 3 பேர் பலி

உசிலம்பட்டி அருகே கார் மரத்தில் மோதி விபத்து : ஊராட்சி எழுத்தர்கள் உட்பட 3 பேர் பலி

உசிலம்பட்டி அருகே கார் மரத்தில் மோதி விபத்து : ஊராட்சி எழுத்தர்கள் உட்பட 3 பேர் பலி

உசிலம்பட்டி அருகே கார் மரத்தில் மோதி விபத்து : ஊராட்சி எழுத்தர்கள் உட்பட 3 பேர் பலி

ADDED : ஆக 15, 2011 01:47 AM


Google News

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் ஊராட்சி எழுத்தர் கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.

மூன்று பேர் காயமடைந்தனர்.உசிலம்பட்டி அருகே உள்ள கணவாய்ப்பட்டியைச் சேர்ந்த சிலுக்குத்தேவர் மகன் ஈஸ்வரன்(31). இவர் ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகளை டெண்டர் எடுத்துள்ளார். நேற்று காலை ஆண்டிபட்டி கணவாயில் அமைந்துள்ள 'வாட்டர் டேங்க்'ஐ சர்வீஸ் செய்ய இவரும், எஸ்.ஒ.ஆர். நகரைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் முருகபாண்டி(25), கீரிபட்டியைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் கிருஷ்ணன்(35), வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்த அய்யங்காளை மகன் சுரேஷ்(37), போத்தம்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன்(30), அம்மமுத்தன்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரஞ்சித்குமார்(31) ஆகியோர் அம்பாசிடர் காரில் சென்றனர். காரை ஈஸ்வரன் ஓட்டினார். நேற்று மாலை 4 மணியளவில் 'வாட்டர் டேங்க்'ஐ சர்வீஸ் செய்து விட்டு உசிலம்பட்டி திரும்பினர். மாதரை அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோடு அருகே உள்ள புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. கிருஷ்ணன், சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். முருகபாண்டி, ஈஸ்வரன், ராமச்சந்திரன், ரஞ்சித்குமார் ஆகியோர் உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு முருகபாண்டி இறந்தார். உசிலம்பட்டி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்த கிருஷ்ணன் கீரிபட்டி ஊராட்சியிலும், சுரேஷ் போத்தம்பட்டி ஊராட்சியிலும் எழுத்தராக பணிபுரிகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us