Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ரோவர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

ரோவர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

ரோவர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

ரோவர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

ADDED : ஆக 15, 2011 01:24 AM


Google News
பெரம்பலூர்: பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரியில், தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.

ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வரதராஜன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கோதணஅடபாணி, துணை முதல்வர் ராஜசேகரன், டீன் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதுரை ஆர்.எல்.மேலாண் கல்லூரி உதவி இயக்குநர் முனைவர் ஸ்ரீராம், வேலைவாய்ப்பு, உயர்கல்வி, அறிவுசார்பு திறன், மென்திறன், கேள்விதிறன் குறித்து விளக்கி பேசினார். கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். பேராசிரியர் அரசி வரவேற்றார். மாணவர் சங்க செயலர் கவிமணி நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us