/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஆசிரியர் இல்லாமல் குழந்தைகள் தவிப்புஆசிரியர் இல்லாமல் குழந்தைகள் தவிப்பு
ஆசிரியர் இல்லாமல் குழந்தைகள் தவிப்பு
ஆசிரியர் இல்லாமல் குழந்தைகள் தவிப்பு
ஆசிரியர் இல்லாமல் குழந்தைகள் தவிப்பு
ADDED : ஆக 14, 2011 10:26 PM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி 11வது வார்டு அம்பேத்கர் காலனியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் எம்.எஸ்., நகர், அம்பேத்கர் காலனி பகுதிகளை சேர்ந்த 45 குழந்தைகள் சேர்ந்துள்ளனர்.
ஆசிரியர் இல்லாததால் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க முடிவதில்லை; பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது. காலை 8.00 முதல் பிற்பகல் 3.30 மணி வரை அங்கன்வாடி செயல்படுகிறது. காலை விளையாட்டுடன் கூடிய பாடம்; மதியம் உணவு வழங்கி தூங்க வைக்க வேண்டும். ஆயா மட்டுமே இருப்பதால், சமையல் செய்து, குழந்தைகளை கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது; குழந்தைகளுக்கு பாடம் நடத்த முடிவதில்லை. பிற அங்கன்வாடி மைய சத்துணவு ஆசிரியர்கள், அவ்வப்போது வந்து பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர். மையத்துக்கு என தனியாக ஆசிரியர் இல்லை. ஆயா சமையல் வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது, குழந்தைகள் மையத்தை விட்டு வெளியே வந்து விடுகின்றனர். எம்.எஸ்., நகர் மெயின் ரோட்டுக்கு வரும் குழந்தைகளை கண்டுபிடித்து, மையத்துக்கு கொண்டுவர சிரமம் ஏற்படுகிறது. போக்குவரத்து நிறைந்த ரோடாக இருப்பதால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. குழந்தைகளை கவனித்துக் கொண்டே, பதற்றத்துடனேயே சமையல் செய்ய வேண்டியுள்ளது. குழந்தைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும்போதும், அடம் பிடிக்கும்போதும் அவர்களை கட்டுப்படுத்த முடிவ தில்லை. குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பு கருதி அங்கன்வாடி மையத்துக்கு ஆசிரியர் நியமிக்க வேண்டும்.