/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உடுமலையில் சாகுபடிக்கான பண்ணைக்கருவிகள் வாடகை கிடு... கிடு... உயர்வுஉடுமலையில் சாகுபடிக்கான பண்ணைக்கருவிகள் வாடகை கிடு... கிடு... உயர்வு
உடுமலையில் சாகுபடிக்கான பண்ணைக்கருவிகள் வாடகை கிடு... கிடு... உயர்வு
உடுமலையில் சாகுபடிக்கான பண்ணைக்கருவிகள் வாடகை கிடு... கிடு... உயர்வு
உடுமலையில் சாகுபடிக்கான பண்ணைக்கருவிகள் வாடகை கிடு... கிடு... உயர்வு
ADDED : ஆக 14, 2011 10:26 PM
உடுமலை : சாகுபடி பணிகளுக்கு பயன்படுத்தும் பண்ணை இயந்திரங்களின் வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளதால் உடுமலை பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிரந்தர தீர்வாக உடுமலையில் வேளாண் பொறியியல் துறை அலுவலகம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் பி.ஏ.பி., அமராவதி மற்றும் கிணற்றுப்பாசனத்திற்கு விவசாய சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக சாகுபடி பணிகளுக்கு பண்ணை இயந்திரங்களை மட்டுமே விவசாயிகள் நம்பியுள்ளனர். பருவமழை காலம் உட்பட மூன்று முறை விளைநிலங்களில் உழவு பணிகள் மற்றும் அறுவடை ஆகிய பணிகள் இயந்திரங்கள் மூலமாக நடக்கிறது. டீசல் விலை உயர்வு காரணமாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பண்ணை இயந்திரங்களின் வாடகை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உழவு பணிகளுக்கு டிராக்டர் வாடகை ஒரு மணி நேரத்திற்கு 300 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்ந்து; மேலும் அதிகரிக்கும் நிலையில் உள்ளது. பருத்தி சாகுபடி முடிந்ததும் செடிகளை மடக்கி உழவு செய்யும் ரோட்டாவேட்டர் கருவிக்கு ஒரு மணி நேரத்திற்கு 600 ரூபாய் வாடகை பெறப்படுகிறது. விளைபொருட்களை எடுத்து செல்ல டிரெய்லர் வாடகை சராசரியாக 300 ரூபாயிலிருந்தும், மக்காச்சோள அரவை இயந்திரத்திற்கு மூட்டைக்கு 50 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. பண்ணை இயந்திரங்களின் வாடகையால் சாகுபடி செலவு அதிகரித்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு சார்பில் செயல்படும் வேளாண் பொறியியல் துறையின் கீழ் பண்ணை இயந்திரங்கள் வாங்க மானியம்; விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு வழங்குவது உட்பட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்துறையின் செயல்பாடுகள் உடுமலை பகுதிக்கு இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை. வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை உடுமலையில் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாரத்திற்கு ஒரு நாள் திருப்பூரிலிருந்து வரும் துறை உதவி பொறியாளர் விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று செல்கிறார். புல்டோசர் இயந்திரம் ஒரு மணிக்கு 755 ரூபாய்; டிராக்டர் 300 ரூபாய்; நெல் அறுவடை இயந்திரம் 825 ரூபாய் என்ற குறைந்த வாடகை அடிப்படையில் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த மூன்று இயந்திரங்களும் திருப்பூரில் மட்டுமே உள்ளன. மாவட்டம் முழுவதற்கும் உள்ள பல ஆயிரம் விவசாய சாகுபடி பரப்பிற்கு மூன்று இயந்திரங்களை மட்டுமே வைத்து செயல்படுத்தி வருகின்றனர். பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்திற்கு வரும் செப்., 1 ல் திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், பல ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம், சூர்யகாந்தி போன்ற பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் விளைநிலங்களை தயார்படுத்தி வருகின்றனர். விரைவில் வேளாண் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகையில் இயந்திரங்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க @வண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
அரசுக்கு கருத்துரு சென்றது : வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் கூறுகையில், 'உடுமலையில் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள் ளது. அலுவலகம் அமைக்கப்பட்டால் இயந்திரங்கள் எளிதாக உடுமலை பகுதி விவசாயிகளுக்கு கிடைக்கும் என்றனர்.