/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/டிரைவர் மீது தாக்குதல் போக்குவரத்து பாதிப்புடிரைவர் மீது தாக்குதல் போக்குவரத்து பாதிப்பு
டிரைவர் மீது தாக்குதல் போக்குவரத்து பாதிப்பு
டிரைவர் மீது தாக்குதல் போக்குவரத்து பாதிப்பு
டிரைவர் மீது தாக்குதல் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 14, 2011 10:23 PM
செம்பட்டி : தேவாரத்திலிருந்து கோயம்புத்தூர் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது.
டிரைவர் கார்த்திகேயன் ஓட்டிச்சென்றார். நேற்று மாலை கன்னிவாடி அருகே சென்றபோது, பஸ்சை பின் தொடர்ந்து அடையாளம் தெரியாத சிலர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பஸ்சை முந்தி செல்ல முயன்றவர்களால் முடியவில்லை. இதனால் டிரைவர் வழி தர மறுக்கிறார் என கூறி ஆத்திரமுற்றுள்ளனர். டி.பண்ணைப்பட்டி அருகே பஸ் வேகத்தடையில் மெதுவாக சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் கார்த்திகேயனை தாக்கியுள்ளனர். காயமடைந்தவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.தகவல் அறிந்த பின்னால் வந்த அரசு பஸ் டிரைவர்கள் தங்கள் பஸ்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டனர். இதனால் செம்பட்டி -ஒட்டன்சத்திரம் ரோட்டில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கன்னிவாடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.