/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிமுன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : ஆக 14, 2011 10:22 PM
திண்டுக்கல் : திண்டுக்கல் ஜி.டி.
என்., கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு வேதியியல் துறையில் படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது. வேதியியல் துறையில் 1983-86 ல் படித்த மாணவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் தங்கள் பேராசிரியர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.
கல்லூரி முதல்வர் மார்கண்டேயன் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் 12 பேர், ஓய்வு பெற்ற வேதியியல் பேராசிரியர்கள் ஜெயராமன், சுகவனம், எஸ். ராஜேந்திரன், என்.ராஜேந்திரன், தீனதயாளன், தற்போதைய வேதியல் துறை தலைவர் சத்யபாமா பங்கேற்றனர். தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர் சேகர் கூறியதாவது:படித்த நண்பர்களை சந்தித்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரி வளாகம், பயின்ற வகுப்பறை ஆகியவற்றை நினைவு கூர்ந்து, கற்பித்த பேராசிரியர்களையும் சந்தித்து பேசி அவர்களின் ஆசிகளையும் பெற்றோம். கல்லூரி முன்னாள் முதல்வர் ஜெயராமன் கூறியதாவது: எங்களை அழைத்து, மாணவர்கள் கவுரவித்தது, பழைய நாட்கள் மீண்டும் வந்தது போல் இருந்தது. நாங்கள் கற்பித்த கல்வி, மேற்படிப்பின் போது மிகவும் உதவியாக இருந்ததாக கூறினர். மொத்தத்தில், இந்த நிகழ்ச்சியில் கிடை த்த சந்தோஷம், ஓய்வு பெற்ற எங்களின் ஆயுளை அதிகப்படுத்துவதாக இருந்தது.