/உள்ளூர் செய்திகள்/கடலூர்/திறனாய்வுத் தேர்வுக்கு வரும் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்திறனாய்வுத் தேர்வுக்கு வரும் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
திறனாய்வுத் தேர்வுக்கு வரும் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
திறனாய்வுத் தேர்வுக்கு வரும் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
திறனாய்வுத் தேர்வுக்கு வரும் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 13, 2011 02:52 AM
கடலூர்:ஊரகப் பகுதி மாணவர்கள் திறனாய்வுத் தேர்வுக்கு வரும் 16ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம் என கடலூர் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர்
ராமச்சந்திரன் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஒவ்வொரு
ஆண்டும் நடத்தப்படும் தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத்
தேர்வு அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கிறது.
விண்ணப்பதாரர்கள் ஊரகப்
பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2010-11ம் ஆண்டில் 8ம்
வகுப்புத் தேர்வில் 50 சதவீதம் மொத்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்து
தற்போது (2011-12 கல்வியாண்டில்) 9ம் வகுப்பு படித்திருக்க
வேண்டும்.பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ளது
என்பதற்கு ஆதாரமாக வருவாய் துறையினரிடம் வருமான சான்று பெற்று அளிக்க
வேண்டும்.தேர்வுக் கட்டணம் 5 ரூபாய், சேவைக் கட்டணம் 5 என மொத்தம் 10
ரூபாயை பள்ளித் தலைமை ஆசிரியர் மூலமாக முதன்மைக் கல்வி அலுவலரிடம் செலுத்த
வேண்டும்.விண்ணப்பிக்கும் தேதி வரும் 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்படும் 100 பேருக்கு (50 ஆண்கள், 50
பெண்கள்) 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் காலத்திற்கு படிப்பு
உதவித்தொகை ஆண்டுதோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும்.நகராட்சி மற்றும்
மாநகராட்சி, ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் பள்ளிகளில் பயில்வோர்
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.இவ்வாறு செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.