/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி? போலீஸார் தொடர் தேடல்ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி? போலீஸார் தொடர் தேடல்
ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி? போலீஸார் தொடர் தேடல்
ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி? போலீஸார் தொடர் தேடல்
ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி? போலீஸார் தொடர் தேடல்
ADDED : ஆக 11, 2011 11:57 PM
ப.வேலூர்: ஜேடர்பாளையத்தில், 6 வயது சிறுவன் ஒருவன் காவிரி ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டான்.
அவனது உடலை மீட்க அங்குள்ள மீனவர்கள் துணையுடன், போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலத்தை சேர்ந்தவர் மகாமுத்திரன். அவர், நேற்று தனது மனைவி மோகனப்பிரியா, மகன் கீர்த்தி(6) ஆகியோருடன், ஜேடர்பாளையத்தில் உள்ள பூங்காவுக்கு பைக்கில் வந்துள்ளார். பூங்காவில் பொழுதைக் கழித்த மூவரும், மாலை 6 மணயளவில் காவிரி ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, பந்தை தூக்கிப்போட்டு மூவரும் விளையாடியுள்ளனர். இந்நிலையில், ஆற்றின் ஆழப்பகுதிக்கு சென்ற கீர்த்தி, தண்ணீர் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டான். அதை பார்த்து மகாமுத்திரன், மோகனப்பிரியாவும் கூச்சல் போட்டுள்ளனர். அருகில் இருந்த மீனவர்கள் ஆற்றில் இறங்கி, சிறுவன் கீர்த்தியை தேடி யுள்ளனர். ஆனால், இரவு 7 மணிவரை சிறுவன் உடல் கிடைக்கவில்லை. அதனால், சிறுவன் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக, ஜேடர்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மீனவர்களுடன் இணைந்து சிறுவன் உடலை தேடி வருகின்றனர்.