ADDED : ஆக 11, 2011 11:04 PM
குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
நிர்வாக குழுத்தலைவர் சட்டநாதன் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். முகாமில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், மற்றும் படிப்பை முடித்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சென்னை ஸ்மைல் மைக்ரோ பைனான்ஸ் கம்பெனி 14 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கியது. ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சேரமான், வணிகவியல் துறைத் தலைவர் சிவசங்கரன், பேராசிரியர் தினேஷ்பாபு செய்திருந்தனர்.