/உள்ளூர் செய்திகள்/சேலம்/அங்கம்மாள் காலனி நிலம் ஆக்கிரமிப்பு பிரச்னைஅங்கம்மாள் காலனி நிலம் ஆக்கிரமிப்பு பிரச்னை
அங்கம்மாள் காலனி நிலம் ஆக்கிரமிப்பு பிரச்னை
அங்கம்மாள் காலனி நிலம் ஆக்கிரமிப்பு பிரச்னை
அங்கம்மாள் காலனி நிலம் ஆக்கிரமிப்பு பிரச்னை
ADDED : ஆக 09, 2011 02:03 AM
சேலம்:'அங்கம்மாள் காலனி நிலத்தில் எங்களுக்கும் பங்கு உண்டு' என, மீண்டும்
ஒரு குடும்பத்தினர் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். ஏற்கனவே,
இரண்டு குடும்பத்தினர் மனு அளித்த நிலையில், மூன்றாவதாக ஒரு குடும்பம் மனு
கொடுத்துள்ளதால், நில அபகரிப்பு பிரச்னையில் சிக்கல் எழுந்துள்ளது.
சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் அங்கம்மாள் காலனி நிலம் உள்ளது. தானமாக
வழங்கப்பட்ட இடத்தில், 30 குடும்பத்தைச் சேர்ந்தோர் குடியிருந்தனர்.
வீரபாண்டி ஆறுமுகம் தூண்டுதலின் பேரில் பாரப்பட்டி சுரேஷ்குமார்,
கவுசிகபூபதி உள்ளிட்டோர், அவர்களை விரட்டியடித்துவிட்டு நிலத்தை
ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பான வழக்கு, தற்போது
விசாரணையில் உள்ளது.இந்த நிலையில், அங்கம்மாள் காலனி அருகில், 98 சென்ட்
நிலம் இருந்தது. அதை, இளங்கோ, சாந்தா, நெடுஞ்செழியன் உள்ளிட்டோர்
பாரப்பட்டி சுரேஷ்குமாரிடம் விற்றதாக கூறப்படுகிறது. அந்த நிலத்தில்,
தங்களுக்கும் பங்கு உண்டு என, சரஸ்வதியம்மாள் என்பவர் மனு அளித்தார்.
அதையடுத்து, லோகநாதன் என்பவரது குடும்பத்தினரும் மனு அளித்தனர்.அதே நிலப்
பிரச்னை தொடர்பாக நேற்று, சிவலிங்கம் என்பவர் குடும்பத்துடன் வந்து
கலெக்டரை சந்தித்து மனு அளித்தார்.அந்த மனுவில் கூறியுள்ளதாவது:அங்கம்மாள்
காலனிக்கு அருகில், குமாரசாமி என்பவருக்கு சொந்தமான, 98 சென்ட் நிலம்
இருந்தது. அவருக்கு, அருணாசலம், பூர்ணையன் என இரண்டு மகன்கள்.
அருணாசலத்துக்கு, ராஜம்மாள், லட்சுமி அம்மாள், முத்தியாலு அம்மாள் என
மூன்று மகள்கள். பூர்ணையத்துக்கு, சிதம்பரம், லோகநாதன், சரஸ்வதி,
முத்தியார் என நான்கு மகள்கள்.சிதம்பரத்தின் மகன்கள், 98 சென்ட் நிலத்தை,
பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிகபூபதி ஆகியோருக்கு விற்று விட்டனர். அந்த
நிலத்தில், எங்களும் பங்கு இருக்கிறது. எங்களுடைய தாத்தா சொத்தை
வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தை மீட்டுத்தர
நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


