/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாரியம்மன் திருவிழாவுக்கென ரவுடிகள் வசூல் வேட்டை: வியாபாரிகள் அதிர்ச்சிமாரியம்மன் திருவிழாவுக்கென ரவுடிகள் வசூல் வேட்டை: வியாபாரிகள் அதிர்ச்சி
மாரியம்மன் திருவிழாவுக்கென ரவுடிகள் வசூல் வேட்டை: வியாபாரிகள் அதிர்ச்சி
மாரியம்மன் திருவிழாவுக்கென ரவுடிகள் வசூல் வேட்டை: வியாபாரிகள் அதிர்ச்சி
மாரியம்மன் திருவிழாவுக்கென ரவுடிகள் வசூல் வேட்டை: வியாபாரிகள் அதிர்ச்சி
ADDED : ஆக 09, 2011 02:01 AM
சேலம்:சேலத்தில் மாரியம்மன் கோவில்களில் ஆடிப்பண்டிகை கொண்டாடுவதை காரணம்
காட்டி, ரவுடிகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதால், வியாபாரிகள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.சேலம் மாநகரத்தில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் மாரியம்மன்
கோவில்களில் விழா நடத்தப்படுகிறது. கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் திருவிழா
துவங்கியது. தொடர்ந்து கம்பம் நடுதல், சக்தி அழைத்தல், உருளதண்டம், பொங்கல்
விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. திருவிழாவை முன்னிட்டு,
கோவில்களில் நாடகம், இன்னிசை கச்சேரி, கலை நிகழ்ச்சிகள் போன்றவை இரவு
நேரங்களில் நடத்தப்படுகிறது.சேலம் டவுன், பழைய பஸ் ஸ்டாண்ட், தாதுபாய்
குட்டை உள்ளிட்ட பகுதியில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், தொழில் கூடங்கள்
உள்ளன. மாரியம்மன் கோவில் பண்டிகையை காரணம் காட்டி, கிச்சிப்பாளையம்,
எருமாபாளையம், கருங்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகள், அதிரடியாக
வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.ரவுடிகள் கும்பலாக சென்று,
மாரியம்மன் கோவில் பண்டிகைக்கு நன்கொடை கேட்டு, வியாபாரிகளிடம் மிரட்டல்
விடுக்கின்றனர். விழா கமிட்டியினர் நோட்டீஸ் கொடுத்து, மாரியம்மன் கோவில்
பண்டிகைக்கு நன்கொடை பெற்றுச் சென்றுள்ள நிலையில், ரவுடிகள் எவ்வித
முகாந்திரமும் இல்லாமல் மாரியம்மன் கோவில் பண்டிகைக்கு நன்கொடை வசூலில்
ஈடுபட்டுள்ளனர்.
ரவுடிகள், 200 முதல் 500 ரூபாய் வரை வசூலில் ஈடுபட்டுள்ளதால், வியாபாரிகள்
கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பணம் கொடுக்க மறுக்கும் வியாபாரிகளை,
ஆபாசமாக திட்டியும், மிரட்டியும் வசூல் செய்கின்றனர்.மாரியம்மன் கோவில்
பண்டிகையை காரணம் காட்டி வசூல் வேட்டையில் ஈடுபடும் ரவுடி கும்பலை
கட்டுப்படுத்த மாநகர போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று
வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.


